நாகரசம்பட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் பிறந்த நாள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள நாகரசம்பட்டி சந்திப்பு சாலையில் இன்று பிப்-24 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காவேரிப்பட்டிணம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பாசறை மாவட்ட செயலாளர் கே. பி. எம். சதீஷ்குமார் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி