கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜனபள்ளி பேரூர், என். தட்டக்கல் கிராமத்தில் பர்கூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 11.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்கூடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.