கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே சிவம்பட்டி ஊராட்சி சிவம்பட்டி ஸ்ரீ பூங்காவனத்தம்மாள் கோவில் அருகே, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் நேற்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், எம்.எல்.ஏ தமிழ்செல்வம் கலந்துகொண்டு குடிநீர் மையத்தை திறந்து வைத்தார். அதிமுக நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.