போச்சம்பள்ளி: அரசமரம் - வேப்பமரத்திற்கு கல்யாணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சுண்டைகாபட்டி கிராமத்தில் இன்று ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சிவசொருபமான அரசமரத்திற்கும் பார்வதி சொருபமான வேப்பமரம் திருக்கல்யாண வைபவ பெருவிழா இன்று (டிசம்பர் 6) நடைபெற்றது. 

பெண் வீட்டார் ராமமூர்த்தி- முத்துலட்சுமி மாப்பிள்ளை வீட்டார் மூர்த்தி- மணிமேகலை சார்பில் மணமகன், மணமகளுக்கு தாம்பூல தட்டில் சீர்வரிசை, சீதனங்களை மங்கல இசை வாத்தியம் முழங்க முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். 

பின்னர் நாகர் கோவிலுக்கு முன்பு யாக சாலை அமைத்து பூஜைகள் செய்து மங்கள வாத்தியத்துடன் புத்தடைகள் அணிவித்த அரசமரம்- வேப்பமரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க பூசாரி தாலி கட்டினார். இதில் திரளான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி