கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்-வாணியம்பாடி சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளுக்குப் பிறகு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.