பர்கூர் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில், மேளதாளங்களுடன் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் ஆடு, கோழிகளை படைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி