கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி தென்னீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை 4 மணிக்கு மூலவர் தென்னீஸ்வரனுக்கும் நந்தி பகவனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ராமநாதீஸ்வரர் அலங்காரத்துடன் ஸ்ரீ தென்னீஸ்வரன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.