பர்கூர் அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகே பெரியபனகமுட்லு அருகே கிருஷ்ணகிரி- திரு வண்ணாமலை சாலை வருவாய்த்துறை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்ட போது அதில் மூன்று யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வி. ஏ. ஒ. வரதராஜ் கந்திகுப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி