கிருஷ்ணகிரி: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு - பெண்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சுண்டைக்காபட்டி பகுதியில், பெண்களுக்கு வேலை வழங்காமல் இயந்திரங்கள் மூலம் பணிகளை முடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 6 நாட்கள் வேலை செய்த 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு வெறும் 50 ரூபாய் வீதம் கணக்கிட்டு, தலா ரூ. 300 மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேட்டைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி