கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு புதிய செயலாளராக அரசம்பட்டி காவாக்கட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கனல் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். போச்சம்பள்ளியில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் பர்கூர் எம்எல்ஏ மேகநாதன், கனல் சிவாவை கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.