போச்சம்பள்ளி அருகே கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி-காரிமங்கலம் சாலையில் உள்ள அகரம் பகுதியில் சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கோழி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி