பர்கூர் அருகே நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர். குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி பெருமாள் (69) மற்றும் அவரது தம்பி சின்னப்பன் (60) இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சின்னப்பன் மற்றும் அவரது மகன் சின்னதம்பி (35) ஆகியோர் சேர்ந்து பெருமாளை தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், சின்னப்பன் மற்றும் சின்னதம்பி ஆகிய இருவரையும் கந்திகுப்பம் போலீசார் கைது செய்தனர்.