கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள இடைபையூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (23) எலக்ட்ரீசியன். இவர் கடந்த 18-ஆம் தேதி அன்று இரவு டூவீலரில் சென்னை கிருஷ்ணகிரி சாலையில் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி அரசு என்ஜினீயரிங் கல்லூரி பாலம் பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் நந்தகுமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.