போச்சம்பள்ளி அருகேமீன் வளர்ப்பு முறைகள் குறித்து பயிர்ச்சி.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூரில் உள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ச்சி மையத்தில் வரும் 25 முதல் 27 ஆம் தேதி வரை 3 நாட்கள் இலவச மீன்வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நடத்தும் இந்த பயிற்சியில், குளம் அமைத்தல், மீன் விதை உற்பத்தி, தீவன மேலாண்மை போன்ற நவீன மீன் வளர்ப்பு முறைகள் குறித்து கற்பிக்கப்படும். முன்பதிவு செய்ய 8122208148, 90920 86570, 8675858383 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி