கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வாடமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் குத்தகைதாரர் வளர்த்து வந்த மீன்கள், காலநிலை மாற்றம் காரணமாக டன் கணக்கில் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும், உடனடியாக மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டுக்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.