போச்சம்பள்ளி எம். ஜி. எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளி சேர்மன் ஜி. பி. பன்னீர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரு வேடமணிந்து வந்தனர். ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. போச்சம்பள்ளி வட்டாச்சியர் அருள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி முதல்வர் செல்வராஜ் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். சுகன்யா, சகினா, மேனகா ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்தனர்.