பர்கூர் அருகே அண்ணன், தம்பியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகே உள்ள சாப்பமுட்லு பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் (35) இளையராஜா (34). சகோதரர்களான இருவரும் ஜெகதேவி அடுத்த ஜிட்டோபனப்பள்ளியில் தாபா ஓட்டல் வைத்துள்ளனர். இங்கு நேற்று முன்தினம் (செப்-24ம் தேதி) மதியம் வந்த 3 பேர் தகராறில் ஈடுபட்டு அண்ணன், தம்பி இருவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

புகாரின் பேரில் பர்கூர் போலீசார் அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்ததில் தகராறில் ஈடுபட்டவர்கள் ஜெகதேவி எம். ஜி. ஆர். காலனியை சேர்ந்த கிரிதரன் (25), அன்பு (26), கிட்டம்பட்டி விக்கி (20) என்பது தெரியவந்தது. இதையெடுத்து பர்கூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி