போச்சம்பள்ளி அருகே கிணற்றில் மீட்கபட்ட கட்டடிடமேஸ்திரி சடலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாவத்தூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போச்சம்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டனர். விசாரணையில், உயிரிழந்தவர் திருவனம்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி முருகேசன் (60) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி