கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பூமாலை நகர் இருளர் காலனி பகுதியைச் சேர்ந்த முரளி (29) என்பவர் தனது வீட்டு அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதில், முரளியின் வீட்டின் பின்புறத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கஞ்சா செடிகளை அழித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.