பர்கூர்: சொத்து பிரச்னையில் பெண்ணை அடித்து கொன்ற 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, நிலத்தகராறில் கூலித்தொழிலாளி கோவிந்தம்மாள் (56) கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், நிலத்தை வாங்கிய உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறில் சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் ஆகியோர் சேர்ந்து கோவிந்தம்மாளை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. நகைக்காக கொலை நடந்தது போல் நாடகமாடிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி