தொலைந்த பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்

கிருஷ்ணகிரி நகர புதிய பேருந்து நிலையத்திற்கு சூளகிரியில் இருந்து அமிர்தா என்ற பெண்மணி வந்து தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் நேற்று(செப்-14) ஏறும் போது கையில் வைத்திருந்த பர்ஸை தவற விட்டுவிட்டார்.

பிறகு அந்த பெண்மணி பல இடத்தில் தேடியும் பர்ஸ் கிடைக்கவில்லை இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள் சர்தார் மற்றும் சலீம் கைக்கு அந்த பர்ஸ் கிடைத்தது. அவர்கள் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து போனில் தொடர்புகொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு வந்த அமிர்தா பர்ஸை வாங்கி அதிலிருந்த பணம், அடையாள அட்டை, இதர பில்கள் மற்றும் ரசீதுகள் சரியாக உள்ளது என்று கூறினார். பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அமிர்தா ஆட்டோ டிரைவர்களுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி