கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தென்னீஸ்வரன் கோவிலில், ஸ்ரீ பாலமுருகனுக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனை காண்பிக்கப்பட்ட இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.