பர்கூர்: பார்வையற்ற மாணவர்கள் சாதனை கலெக்டர், எம். எல். ஏ. பாராட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஐ. இ. எல். சி. கன்கார்டியா பார்வையற்றோர் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 525 மதிப்பெண் பெற்ற திலீபன், 519 மதிப்பெண்களை பெற்ற நவீன் ஆகியோரை கலெக்டர் தினேஷ் குமார், மதியழகன் எம். எல். ஏ. ஆகியோர் நேற்று பாராட்டினர். கலெக்டர் தனது விருப்ப நிதியில் இருந்து தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரமும், எம். எல். ஏ. வும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி