போச்சம்பள்ளி: மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சாவில் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அருகே பிளஸ் 2 படித்து வரும் மாணவிக்கு கடந்த 23-ம் தேதி அன்று வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பெற்றோர்கள் போச்சம்பள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் மாணவி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதனால் மாணவியை பெற்றோர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கர்ப்பத்திற்கு காரணமானவரை தெரியாத நிலையில் தொடர்ந்து மாணவியிடம் விசாரனை நடத்தியதில், சின்ன ஆலரப்பட்டி பகுதியை சேர்ந்த கவியரசு (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து கவியரசுவை போக்சோவில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி