கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூரைச் சேர்ந்த மணிமாறன் (28) என்பவர், கடந்த 31-ஆம் தேதி அன்று போச்சம்பள்ளி-சந்தூர் சாலையில் வெப்பாலம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே டூவீலரில் சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த மணிமாறனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமாறன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.