கிருஷ்ணகிரி: சரக்கு வேன் மீது டூவீலர் மோதி விபத்து; வாலிபர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள கூனிதிப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (25) விவசாயி. இவர் டூவீலரில் கடந்த 5-ஆம் தேதி அன்று போச்சம்பள்ளி-தர்மபுரி சாலையில் உள்ள எஸ். முதுகம்பட்டி அருகே சென்றபோது முன்னால் சென்ற சரக்கு வேன் மீது டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி