கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அங்கிநாயக்கனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன்(75) என்பவர் நேற்று முன்தினம் (ஜூன் 2) காலை சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.