பர்கூர் அருகே மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரி பர்கூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, டூவீலரில் வந்த தாமோதரன் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அவர் மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 மதுபாட்டில்களையும், டூவீலரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி