கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே துரைசாமி கொட்டாய் பகுதியில் வீடுகளில் மண் வீச்சு, குழந்தைகள் பெரியவர்கள் போல அலறுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், கழிவறை அருகே பறந்து செல்லும் கருப்பு உருவம் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், சிலர் இது வெறும் புரளி என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.