கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூரை அடுத்த பி. ஆா். ஜி. மாதேப்பள்ளியைச் சோ்ந்த துணி வியாபாரி சென்னகேசவன், கல்லாவியைச் சோ்ந்த நண்பா் கணேசனை பிரியாணி சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொன்றாா். பின்னா், கணேசனின் உடலை வீட்டில் புதைத்துவிட்டு, துா்நாற்றம் வீசியதால் வீட்டின் முன் சாலையோரம் வீசிவிட்டுச் சென்றாா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் விசாரித்து, சென்னகேசவனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.