பர்கூர் அருகே டூவீலர் கவிழ்ந்து துணி வியாபாரி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் முனிகுண்டுலு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (39) இவர் வெளியூரில் சென்று கடைகளுக்குத் துணி வியாபாரம் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் (ஜூன் 11) இரவு சின்ன பர்கூர் பைபாஸ் சாலையில் இருந்து தனது வீட்டிற்குத் தூவீலரில் சென்றபோது சாலையில் கொட்டி வைத்திருந்த ஜல்லிக்கற்கள் மீது டூ வீலர் ஏறியதில் நாகராஜன் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். 

அவரை மீட்டுப் பர்கூர் அரசு மருத்துவமனை மற்றும் மேல் சிகிச்சைக்கு ஓரப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நாகராஜனைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறினார். இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டு இந்த விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி