கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து காரிமங்கலம் நோக்கி நேற்று அதிவேகமாக சென்ற கார், ராமர் கொட்டாய் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த மனோஜ் என்பவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.