கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சின்னகோனாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி, விவசாயியான இவர் நாட்டு மாட்டுக் கன்றுக்குட்டியை வளர்த்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் கன்றுக்குட்டியை மேய்த்துக்கொண்டிருந்தபோது அப்போது தரைமட்டமாக இருந்த 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் கன்றுக்குட்டி தவறிவிழுந்து கன்றுக்குட்டி தத்தளித்தது. தகவல் அறிந்து வந்த பர்கூர் அலுவலக தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.