கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பாரூர் போலீசாருக்கு வாடமங்கலம் பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் செப்- 1-ம் தேதி அன்று அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த சீனிவாசன் (32) ராஜிவேல் (34) ராஜசேகர் (40) பிரபு (39)மதன் (35) ஆகிய 5 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.