ALERT: கிருஷ்ணகிரியில் பேய் மழை கொட்டும்..எச்சரிக்கை மக்களே

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 15) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், கடலூர், திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இன்று (ஜூன் 15) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் கனமழை அல்லது அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை அல்லது மிககனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி