கொல்கத்தா துர்கா பூஜை நெரிசல்: கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு

கொல்கத்தா சோர்பகன் பகுதியில் துர்கா பூஜையின்போது மழையால் பந்தலுக்குள் மக்கள் முண்டியடித்ததில் ஏற்பட்ட நெரிசலில் 19 பேர் பலியாகினர். இந்நிலையில், 'பந்தல் இடிந்து விழுகிறது' என மக்களிடையே தவறான அறிவிப்பை வெளியிட்டு நெரிசலைத் தூண்டியதாக சஞ்சீப் ரஹா, குஷால் மஜும்தார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், தற்போது கைதானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕