கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை எதிர்த்தரப்பு விசாரிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தற்போது முதலமைச்சராக இல்லாத எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக ஏன் விசாரிக்கக் கூடாது? என கேள்வியெழுப்பினார். இதைத்தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.