“தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை இன்னும் முதற்கட்ட ஆய்விலேயே உள்ளது” என RTI மூலம் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ஓர் ஆண்டு காலமாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்கத் திட்டம் காத்திருக்கிறது. ஆனால், திட்ட அறிக்கை சமர்ப்பித்த 4 மாதங்களில் பாட்னா மெட்ரோவுக்கும், 7 மாதங்களில் அகமதாபாத் மெட்ரோவுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.