தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் காயம் காரணமாக விலகியதால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட இந்திய அணியில் துருவ் ஜூரெல் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.