உதட்டில் முத்தமிடும் பழக்கம் மனிதர்களால் அல்ல, சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பே குரங்குகளால் தொடங்கியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிம்பன்சி, போனோபோ உள்ளிட்ட குரங்குகள் முத்தமிடும் பழக்கம் கொண்டுள்ளன. மனிதர்களுக்கு முன் வாழ்ந்த நியாண்டர்தால்களும் இதைப் பின்பற்றியிருக்கலாம் என்றும், மனிதர்களும் அவர்களுடன் முத்தமிட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது. அன்பின் இந்த அடையாளம் பரிணாமங்களைக் கடந்து இன்று வரை உள்ளது.