‘கிணறு’ படக்குழுவை பாராட்டிய நடிகர் ஜீவா

இயக்குநர் ஹரி குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிணறு’ திரைப்படம், கிராமத்து சிறார்களின் கிணற்றில் நீராடும் உளவியல் ஆசையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஸ்டோரீஸ் மற்றும் பெட்ரா ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டையும் விருதையும் வென்றது. படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்ட நடிகர் ஜீவா, "படக்குழு பயங்கரமான உழைப்பை போட்டுருக்காங்க. நல்ல பீல் குட் படம்" என படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி