பட்டப்பகலில் இளைஞர் கடத்தல்.. பகீர் வீடியோ

மதுரை: பட்டப்பகலில் இளைஞர் கடத்தப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை ஆட்சியர் அலுவலக சாலையில் நின்று கொண்டிருந்த செந்தில்குமார் என்ற இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றது. இதையடுத்து, தல்லாகுளம் போலீசார் காரை துரத்திச் சென்று செந்தில்குமாரை மீட்டு, 4 பேரை கைது செய்தனர். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இக்கடத்தல் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி