விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்த குஷ்பு

அதிமுக - பாஜக கூட்டணிக்கு, தவெக தலைவர் விஜய் வர வேண்டும் என பாஜக துணை தலைவர் குஷ்பு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர், "விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான். கூட்டணி விவகாரங்கள் பற்றி நான் மேலிட அனுமதி இல்லாமல் பேச இயலாது. என்றாலும் தம்பி என்ற முறையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைவரும் ஒரே அணியில் கைகோர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி