கேலோ இந்தியா: 8 ஆண்டுகளில் ரூ.29.5 கோடி மட்டுமே ஒதுக்கீடு

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு கடந்த 8 ஆண்டுகளில் வெறும் ரூ.29.5 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதேசமயம், குஜராத்துக்கு ரூ.605 கோடி, உ.பி.க்கு ரூ.509 கோடி, இமாச்சல், ஹரியானவுக்கு தலா ரூ.180 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் ஒரேயொரு மைதானத்திற்காக ரூ.580 கோடியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. 2024-ல் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், கேலோ இந்தியா நிதி ஒதுக்கீட்டை "பெரும் அநீதி" என விமர்சித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி