தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் . கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் 'கட்டா குஸ்தி' திரைப்படம் வெளியானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது “கட்டா குஸ்தி 2" படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'கட்டா குஸ்தி 2' படத்தின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன ராஜ ராஜேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.