கே.ஜி.எப் படத்தில் 'மெஹபூபா', 'தீரா தீரா' போன்ற பாடல்களைப் பாடிய பாடகி அனன்யா பட், டிரம்மர் மஞ்சுநாத்தை திருமலையில் எளிமையாக திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். அனன்யா தனது திருமணம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இவர் 'புஷ்பா' படத்தின் கன்னட பதிப்பில் 'சாமி சாமி' பாடலையும், சமீபத்தில் சில தெலுங்கு படங்களிலும் பாடியுள்ளார்.