கேஜிஎப் சாப்டர் 3 குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், இயக்குனர் பிரஷாந்த் நீல் சமீபத்தில் ஒரு நேர்காணலில் இது குறித்து பேசியுள்ளார். டிராகன் படத்தை முடித்தவுடன் பிரபாஸின் சலார்-2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது தானும் யாஷும் பல படங்களில் கமிட்டாகி இருப்பதால் கேஜிஎப்-3 படத்தை தொடங்க அதிக கால அவகாசம் எடுக்கும் என்றும், இது குறித்து யோசிக்கவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது பிரஷாந்த் நீல் ஜூனியர் என்.டி.ஆர். உடன் 'டிராகன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி வெளியாக உள்ளது.