2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி என்ற இலக்குடன் அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி, முன்னாள் நீதிபதி உள்ளிட்டோர் இன்று (ஜூன் 9) இணைந்தனர். முன்னதாக விசிகவில் நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, பாஜக, அதிமுகவில் இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரும் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டு விஜய்யின் அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.