2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணிக்கு ஆயத்தமாகி வருகின்றன. இதனிடையே, சமீபத்தில் தேமுதிக, அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. முதல்வரின் உடல்நலம் விசாரிக்க நேரில் சந்தித்ததாக கூறப்பட்டாலும், அரசியல்கட்ட நகர்வுகள் பேசுபொருளாகியுள்ளது. OPS அரசியலில் எதுவும் நடக்கும் என சூசகமாக பேசியது கவனம் பெற்றுள்ளது.