திருச்சி அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் தவெகவில் இன்று (மே.18) இணைந்துள்ளனர். தவெக டெல்டா மண்டல பொறுப்பாளர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். மேலும், ஜங்ஷன் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டியன், உறையூர் பகுதி செயலாளர் பூபதி ஆகியோரும் தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.